அண்ணா மலையும் இங்குண்டு- ஆதி
அருணா சலமும் இங்குண்டு
... அர்த நாதீஸ்வரர் இங்குண்டு- அஷ்ட
லிங்க தரிசனம் இங்குண்டு
கோபுரம் ஒன்பது இங்குண்டு- கோடி
புண்ணியம் பெறும்வழி இங்குண்டு
அடிமுடி கதையும் இங்குண்டு- ஆன்ம
சித்தர் வாழ்ந்தகுகை இங்குண்டு
பரணி தீபமும் இங்குண்டு- பார்
போற்றும் கிரிவலம் இங்குன்டு
மகா தீபமும் இங்குண்டு- மலை
மீது ஜோதியும் இங்குண்டு
தர்ம சாலைகள் இங்குண்டு- தச
நாட்கள் திருவிழா இங்குண்டு
வந்து அருள்பெறுவீர் இவைகண்டு- வர
வேற்க ஓர்நெஞ்சம் இங்குண்டு..
The above lines are written by a devotee - V.Durairaj
Published on 8th December 2011 in thiruvannamalai.in